சபாநாயகர் அசோக ரங்வாலாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானம்!
#SriLanka
Thamilini
11 months ago
சபாநாயகர் அசோக ரங்வாலாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளரான சாகர காரியவம் இதனைத் தெரிவித்தார்.
சபாநாயகர் ஆரம்பத்தில் கலாநிதி பட்டம் மற்றும் பல்வேறு பட்டங்களைக் காட்டி மக்களை ஏமாற்றி விட்டார் என அவர் தெரிவித்துள்ள அவர், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தனது நாடாளுமன்றக் குழுவின் ஊடாக சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு முழு எதிர்க்கட்சியினரும், அரசாங்கத்தின் மனசாட்சியுள்ள உறுப்பினர்களும் பங்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.