இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான சுங்க வரியை குறைக்குமாறு கோரிக்கை!
#SriLanka
#rice
Thamilini
11 months ago
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான சுங்க வரியை 15 ரூபாவால் குறைத்தால் அரிசியை அதிகபட்ச விலையில் சில்லறை விற்பனைக்கு வழங்க முடியும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு அரிசியை ஏறக்குறைய 220 ரூபாவிற்கு இறக்குமதியாளர்கள் வழங்க முடியும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் சேனவிரத்ன தெரிவித்தார்.
அரிசி மொத்த சந்தைக்கு வரும்போது விநியோக வலையமைப்புக்கு ஒரு கிலோவுக்கு 8 முதல் 10 வீதம் வரை செலவாகும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் திரு.நிஹால் சேனவிரத்ன தெரிவித்தார்.