கொழும்பு பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம்!
#SriLanka
#Colombo
#Stock
Thamilini
11 months ago
இலங்கை மூலதனச் சந்தை வரலாற்றில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் இன்று (12) வரலாற்றில் முதல் தடவையாக 14,000 புள்ளிகளைக் கடந்தது.
இன்றைய நாளின் நிறைவில் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்களும் 150.72 புள்ளிகளால் அதிகரித்தது.
அதற்கமைய இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அதன் பெறுமதி 14,035.81 புள்ளிகளாகப் பதிவானது. இதேவேளை, S&P SL20 சுட்டெண் 42.80 புள்ளிகளால் அதிகரித்து இன்றைய வர்த்தகத்தின் முடிவில் 4,186.09 புள்ளிகளில் நிறைவடைந்தது.