மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம்!
#SriLanka
#Electricity Bill
Dhushanthini K
8 months ago

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி எடுக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான 6 மாத காலப்பகுதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவுக்கான பொது கலந்தாய்வு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த நோக்கத்திற்காக, ஜனவரி 08 ஆம் திகதி வரை எழுத்துப்பூர்வ கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் 09 அமர்வுகள் மூலம் வாய்வழி கருத்துக்கள் கோரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



