இன, மத பேதமின்றி மக்களை ஒன்றிணைப்பது முக்கியம் - ஜுலி சங்!

#SriLanka #julie chung
Dhushanthini K
8 months ago
இன, மத பேதமின்றி மக்களை ஒன்றிணைப்பது முக்கியம்  - ஜுலி சங்!

இன, மத பேதமின்றி மக்களை ஒன்றிணைப்பது முக்கியம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  ஜூலி சாங் தெரிவித்துள்ளார். 

 கண்டி மாநகர சபையின் டி.எஸ்.சேனநாயக்க ஞாபகார்த்த பொது நூலகத்துடன் இணைந்த அமெரிக்க தகவல் சதுக்கம் நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஒற்றுமை பற்றி பேசியதாக கேள்விப்பட்டோம். உங்களுடைய ஜனாதிபதி இந்த நாட்டில் இனவாதத்திற்கோ, தீவிரவாதத்திற்கோ இடமில்லை என்று கூறினார்.

உங்களுடைய அனைத்து வேறுபாடுகளும் வேற்றுமைகளும் கொண்டாடப்பட வேண்டும். சமூகங்களை ஒன்றிணைப்பதன் மூலம் 'அமெரிக்கன் கார்னர்' அந்த பார்வைக்கு பங்களிக்க முடிந்ததில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். 

உங்கள் பின்னணி, மொழி, மதம், பொருளாதார நிலை, நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, அங்கே முக்கியமில்லை. மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!