வாதுவயில் தீயில் எரிந்து நாசமான வீடு : தீவிர விசாரணையில் பொலிஸார்!
#SriLanka
#Accident
#fire
Thamilini
11 months ago
வாதுவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக வடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவியதையடுத்து, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சேர்ந்து தீயை கட்டுப்படுத்தினர். எனினும் இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டின் பெண் ஒருவர் புத்த விளக்கை ஏற்றி விட்டுச் சென்றதால், அது கீழே விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.