யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரில் 62 மாணவர்கள் இணைவு!

#SriLanka #Hospital
Mayoorikka
8 months ago
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரில் 62 மாணவர்கள் இணைவு!

யாழ் தாதியர் பயிற்சி கல்லூரியில் புதிதாக 62 மாணவர்கள் பயிற்சிக்காக இணைந்துள்ளனர். தாதியர் பயிற்சி கல்லூரி அதிபர் தலைமையில் இயங்கும் இந்த கல்லூரியில் மாணவர்களுக்கான போதிய வசதிகள் காணப்படுகின்றன. 

விசேட வகுப்பறைகள், கண்ணணி வசதிகள், நூலகம், செயற்பாட்டு அறைகள் உள்ளிட்ட அனைத்தும் மாணவர்கள் கற்றலை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

images/content-image/2024/1733893366.jpg

மேலும், மாணவர்கள் தங்கி இருந்து படிப்பதற்கான தங்குமிட வசதிகளும் உண்டு. தாதியர் பற்றாக்குறை இலங்கையின் பல வைத்தியசாலைகளில் நிலவுகிறது.

images/content-image/2024/1733893392.jpg

 யாழ் போதனா வைத்தியசாலையும் இதற்கு விதிவிலக்கல்ல; அங்கு தாதியர் பற்றாக்குறை காணப்படுகிறது.

images/content-image/2024/1733893408.jpg

 இந்நிலையில், தாதியர் பயிற்சியை முடித்த மாணவர்கள் தற்காலிகமாக கடமையில் ஈடுபட சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

 இதற்கமைய, யாழ் போதனா வைத்தியசாலையில் பயிற்சியை முடித்த 46 தாதியர்கள் தற்போது தற்காலிகமாக கடமையை பொறுப்பேற்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!