அனைவருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு உரிமையுண்டு!

#SriLanka
Mayoorikka
8 months ago
அனைவருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு உரிமையுண்டு!

அனைவருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு உரிமையுண்டு என்பதே எங்கள் நிலைப்பாடு என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சமீபத்தில் மாவீரர்கள் நாள் தொடர்பில் பல கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

 அனைவருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு உரிமையுண்டு என்பதே எங்கள் நிலைப்பாடு. தற்போதும் இதுவே எங்கள் நிலைப்பாடு.டக்கிற்கும் தெற்கிற்கும் இந்த நிலைப்பாடு பொருந்தும்.

 எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளதால் நினைவுகூரலின் போது அவர்களின் கொடிகள் இலச்சினைகளை பயன்படுத்த அனுமதியில்லை.

 இதேவேளை சமூக ஊடகங்களை பயன்படுத்தி திட்டமிட்ட அடிப்படையில் தெற்கில் பிரச்சாரமொன்று முன்னெடுக்கப்பட்டது, இந்த பிரச்சாரத்திற்கு அவர்கள் 2018 - 2022 இல் எடுக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தினார்கள். இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கிலேயே இதனை செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!