திருகோணமலையில் பெண் செயற்பாட்டாளருக்கு CIDயினர் அழைப்பு
#SriLanka
Mayoorikka
1 year ago
மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி CIDயினரால் விசாரணைக்காக இன்று புதன்கிழமை (04) அழைக்கப்பட்டுள்ளார்.
மூதூர் முன்னம்போடிவெட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி (வயது 60) என்பவருக்கு திருகோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (04) காலை 10.00 மணியளவில் திருகோணமலை பழைய பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபர் கடந்த பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி திருகோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.