அரசுக்கு பெரும் செலவாகும் அதி சொகுசு வாகனங்களை முறைப்படி அகற்ற ஒப்புதல்!

#SriLanka #government #luxury vehicle
Thamilini
1 year ago
அரசுக்கு பெரும் செலவாகும் அதி சொகுசு வாகனங்களை முறைப்படி அகற்ற ஒப்புதல்!

அரசு நிறுவனங்களுக்கு பெரும் செலவாகும் சொகுசு வாகனங்களை முறைப்படி அகற்ற அமைச்சர்கள் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. 

 நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். 

 அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சில சொகுசு வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கான அதிக விலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான சொகுசு வாகனங்களை அப்புறப்படுத்துவது பொருளாதார ரீதியில் அதிக பலன் அளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கமைய அனைத்து அரச வாகனங்களையும் ஆய்வு உட்படுத்தி 1800சிசிக்கு மேல் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2300சிசிக்கு மேல் டீசல் என்ஜின் திறன் கொண்ட வாகனங்கள் 2025.03.01 திகதிக்கு முன்னர் அந்தந்த பிரதம கணக்கீட்டு உத்தியோகத்தர்கள் மூலம் பாவனையிலிருந்து அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை