பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற கோர விபத்து : நால்வர் வைத்தியசாலையில்!
#SriLanka
#Accident
Dhushanthini K
8 months ago
காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காலி சுதர்மாராம கோவிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நால்வரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.