எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் யாழில் கைது!
#SriLanka
Mayoorikka
1 year ago
காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க வந்த மீனவர்கள் இன்று அதிகாலை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
குறித்த 18 இந்திய மீனவர்களையும் யாழ்ப்பாணம் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
இவ் வழக்கை விசாரித்த நீதிபதி கிருசாந்தன் பொன்னுத்துரை மீனவர்களை வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.