இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு!
#SriLanka
Mayoorikka
1 year ago
சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான நீண்டகால உறவுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக விவகாரங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கருத்து பரிமாற்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.