வெள்ள அனர்த்தத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து!
#SriLanka
Mayoorikka
8 months ago
வெள்ள அனர்த்தத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து மக்கள் விழிப்பாக செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரித்தார்.
கிளிநொச்சியில் நடந்த ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் அண்மை நாட்களாக இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர்
.இவர்கள் வெள்ள நீரில் பயணம் செய்திருந்தனர்.வெள்ளநீர் மூலம் எலியின் சிறுநீர் மூலம் பக்ரீறியா தொற்று ஏற்பட்டு குறித்த நோய் ஏற்படுகிறது.
எனவே கடுமையான காய்ச்சல் மற்றும் கால் நோ, கண்சிவப்பு போன்ற அறிகுறி காணப்பட்டால் மருத்துவ உதவியைப்பெற்று எலிக்காய்சலிருந்து பாதுகாக்குமாறு தெரிவித்திருந்தார்.