ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த திட்டமிடும் மைத்திரி : தலைவர் பதவியை துறக்கவும் முடிவு!
#SriLanka
#Chandrika Kumaratunga
#Maithripala Sirisena
Thamilini
1 year ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கட்சியை பலப்படுத்துவதற்காக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் மற்ற தரப்பினரால் தொடரப்பட்ட வழக்குகளை நீக்கினால் கட்சியை மீட்க முடியும் என்றும், கட்சியை இளைஞர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் எனவும் கட்சி உறுப்பினராக மட்டுமே செயற்படுவேன் எனவும் மைத்திரிபால சிறிசேன குறித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.