இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#weather
#Rain
Thamilini
1 year ago
நாட்டின் வடக்கு மற்றம் கிழக்கு மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல மழைக்காலங்கள் காணப்படும்.
மீதமுள்ள பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.