கடற் பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#weather
Thamilini
1 year ago
இலங்கையின் ஆழமற்ற மற்றும் ஆழமான கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் அலைகளின் வேகம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.