Laughs எரிவாயு பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானத்தை எடுக்கும்!
#SriLanka
#Laugfs gas
Thamilini
1 year ago
LP எரிவாயுவை இறக்குமதி செய்து நுகர்வோருக்கு வழங்க தவறினால் அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், எங்கள் நாட்டில் லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு எல்பி எரிவாயு நிறுவனங்கள் உள்ளன.
லிட்ரோ எரிவாயுவிற்கு தற்போது தட்டுப்பாடு இல்லை. லாஃப் கேஸ் பற்றாக்குறைக்கான காரணங்களை விளக்க வேண்டும். லாஃப் கேஸ் எரிவாயுவை இறக்குமதி செய்து வழங்குவதில் தலையிடத் தவறினால், அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
லிட்ரோ எரிவாயுவில் ஏராளமான கையிருப்பு உள்ளது. எரிவாயு நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண காஸ் சிலிண்டர்களை மாற்ற வேண்டும் என்றால், அது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.