பதுளை தொடக்கம் எல்ல வரையிலான ரயில் சேவைகளுக்கு இரத்து!
#SriLanka
#Train
Dhushanthini K
8 months ago
பதுளை தொடக்கம் எல்ல பகுதிக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்னும் சில நாட்களுக்கு தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரயில் பாதையில் விழுந்த மண்மேடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் ரயில்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பல நாட்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதி நேற்று (29) பிற்பகல் முதல் சிறியளவிலான போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.