மழை குறைவடைந்தபோதும் ஆபத்தில் உள்ள வடமாகாணம்!

#SriLanka #weather #Rain
Thamilini
1 year ago
மழை குறைவடைந்தபோதும் ஆபத்தில் உள்ள வடமாகாணம்!

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் இன்று குறையத் தொடங்கிய போதிலும் வட மாகாணம் உட்பட சில பகுதிகள் இன்னும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய  24 மாவட்டங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. எவ்வாறாயினும், பொலன்னறுவை மாவட்டத்தின் மானம்பிட்டிய, கண்டி பேராதனை, ஹொரவ்பொத்தானை, தந்திரிமலை மற்றும் மொரகவெவ பிரதேசங்களில் இன்னும் அபாயங்கள் நீடிக்கின்றன.

 பதுளை, கண்டி, கொழும்பு, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது.

மேலும் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை