சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை!
#SriLanka
#weather
#competition
Dhushanthini K
8 months ago
சீரற்ற காலநிலையினால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயாபீன், மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் எனவும், நாட்டில் நிலவும் மோசமான காலநிலை குறைந்த பின்னர் பயிர் சேதம் தொடர்பான விபரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.