வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பிக்கும் இறுதி நாள் இன்று!
#SriLanka
#taxes
Thamilini
1 year ago
2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பிக்க இன்று (30.11) இறுதிநாளாகும்.
அறிக்கைகள் ஆன்லைனில் மட்டுமே பெறப்படும் என்றும், அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம், பிராந்திய மற்றும் நகர அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஜவட்டா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையும் வருமான வரி செலுத்துவதற்காக திறந்து வைக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.