படிப்படியாக குறைவடையும் மழையுடனான வானிலை!
#SriLanka
#weather
Thamilini
1 year ago
வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) காலை வரை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேலும் வளர்ச்சியடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் வடமேற்கு நோக்கி மிக மெதுவாக நகரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலவும் மழையுடனான வானிலை வரும் முப்பதாம் திகதிமுதல் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.