பிரான்ஸ் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை

#Parliament #France #government #confidence
Prasu
1 week ago
பிரான்ஸ் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் Michel Barnier இன் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரும் முடிவை எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளன.

இந்நிலையில் அது தொடர்பில் புதிய கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. motion de censure எனப்படும் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுக்கப்படும். 

அதில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டால் Michel Barnier இன் அரசாங்கம் கவிழ்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று இணையவழியாக மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 53% சதவீதமானவர்கள் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரவேண்டும் என தெரிவித்துள்ளனர். 

46% சதவீதமானவர்கள் வேண்டாம் எனவும், 1% சதவீதமானவர்கள் பதிலளிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

 அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவதற்கு 50% சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆதரவு தெரிவிப்பது இதுவே முதன் முறையாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!