சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : 17 பேர் மாயம்!
#weather
#Missing
Thamilini
1 year ago
சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளதுடன், 17 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புத்தளம், பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 98,635 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 330,894 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் நாடு முழுவதும் 183 பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 82 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 1,465 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.