கடனை மீளவு செலுத்தும் விடயத்தில் நெருக்கடிக்குள் செல்கிறதா இலங்கை?
#SriLanka
#Bank
#nandalal weerasinghe
Dhushanthini K
8 months ago

கடனை மீளச் செலுத்தும் விடயத்தில் இலங்கை நெருக்கடிக்குள் செல்வதாக கூறுவது முற்றிலும் தவறானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், செலுத்தவேண்டிய கடன் தொகைகளில் வரும் 2027 ஆம் ஆண்டுவரை வட்டி மட்டுமே செலுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
சில கடன்கள் 2040 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில 2028 -2032 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.



