திருகோணமலை நோக்கி நகரும் தாழ்வு நிலை : பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை!
#SriLanka
#weather
#Rain
Dhushanthini K
8 months ago

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) அதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது நாட்டின் கிழக்குக் கரையை அண்மித்துள்ள வடமேற்கு திசையில் மிக மெதுவாக நகர்வதாகவும், அது இன்று மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் தாக்கத்தினால் வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.



