அனர்த்த நிலமைகளில் பணிப்புரியும் இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் - நாமல் வெளியிட்டுள்ள கருத்து!
#SriLanka
#weather
#Namal Rajapaksha
Thamilini
1 year ago
"ஃபெங்கல் சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, உயிர்களைக் காப்பாற்றும் ராணுவ வீரர்களுக்கு வணக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிழக்கில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வருத்தம் வெளியிட்டுள்ள அவர், வெள்ளத்தால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு உடனடி நிவாரணம் மற்றும் தங்குமிடங்களின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உடனடி நிவாரணம் வழங்கவும், உணவு மற்றும் வசதிகளுடன் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.