சீரற்ற வானிலையால் ரயில் சேவைகள் இரத்து!
#SriLanka
#weather
#Train
Thamilini
1 year ago
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தில் பொலன்னறுவை வரையிலான ரயில் போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல் நானுஓயா புகையிரத பாதையிலும் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹட்டன் ரயில் பாதையில் மண்குவியல் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரயில் சேவைகள் தடைப்பட்டதுடன், தண்டவாளத்தில் விழுந்த குப்பைக் குவியலை வெட்டி அகற்றிய பின்னரே ரயில் கொழும்புக்கு இயக்கப்பட்டதாக பொறியாளர் கூறினார்.