யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு!

#SriLanka
Mayoorikka
8 months ago
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு!

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, அங்கு 253 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 அதேநேரம் முல்லைத்தீவு, துணுக்காய் பகுதியில் 253 மி.மீ. மழை வீழ்ச்சியும், அச்சுவேலி பகுதியில் 245.3 மி.மீ வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

 இதேவேளை, தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 130 கிலோ மீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 05.30 மணியளவில் நிலை கொண்டிருந்தது.

 அது அடுத்த 12 மணி நேரத்தில் தீவின் கிழக்கு கடற்கரையை அண்மித்து நகர்ந்து சூறாவளியாக வலுப்பெற வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!