கனகாம்பிகைக்குள பிரதேச மக்களுக்கு வெள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பு

#SriLanka #Warning #Flood #Climate #HeavyRain
Prasu
1 year ago
கனகாம்பிகைக்குள பிரதேச மக்களுக்கு வெள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பு

தற்போது கனகாம்பிகைக்குளம் 06 அங்குலம் வான்பாய்ந்து கொண்டிருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைத்து வருவதால் புலிக்குளத்தில் இருந்து அதிகளவு நீர் கனகாம்பிகைக்குளத்திற்கு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. 

இதனால் வான்பாயக்கூடிய அளவு அதிகரிக்கலாம். எனவே கனகாம்பிகைக்குளத்தின் கீழ்பகுதியில் வசிக்கின்ற மக்கள் குறிப்பாக ஆனந்தபுரம், இரத்தினபுரம் ஆகிய பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், வெள்ள அனர்த்தம் அதிகரிக்குமாக இருந்தால் கிராம சேவகர்களுக்கு அறிவித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை