நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் அல்ல, சிங்கள அரசுக்கே எதிரானவன் - அர்ச்சுனா!
#SriLanka
Dhushanthini K
8 months ago

யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் டுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பிரபாகரனை கடவுள் என்று கூறி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவொன்றில், தனது தந்தை இலங்கை அரசாங்கத்தின் முன்னாள் பொலிஸ் அதிகாரி எனவும், தாம் 1987ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பொலிஸில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இனவாதிகள் அல்ல. நாங்கள் இலங்கைத் தமிழர்கள். இந்த மாதம் போரின்போது உயிரிழந்த உயிர்களை நினைவுகூர்கிறோம். நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் அல்ல, எங்களைக் கொன்ற சிங்கள அரசுக்கு மட்டுமே எதிரானவன்" என்று அவர் கூறினார்.



