சட்டதரணிகள் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார் டக்ளஸ் தேவானந்தா!
#SriLanka
#Douglas Devananda
#Court Order
Dhushanthini K
8 months ago

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க ஆஜராகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (25) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக முன்னிலையானார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவிட்டார்.
அதன்பின், பிணையில் வெளிவந்த திரு.தேவானந்தாவை அடுத்த நீதிமன்ற திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



