நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு மாவீரர் நிகழ்வுகளை நடத்துமாறு கோரிக்கை!
#SriLanka
#Law
Thamilini
1 year ago
நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து அதற்கு இணங்க மாவீரர் தினத்தை கடைப்பிடிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்காது என தெரிவித்த அவர், விடுதலை புலிகளின் இலட்சினைகள் உருவப்படங்களை காட்சிப்படுத்துவதை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.