சுஜீவ சேனசிங்கவின் வாகனத்தை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
#SriLanka
Mayoorikka
1 year ago
நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் வி8 வாகனத்தை விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
100 மில்லியன் ரூபா பிணையில் வாகனத்தை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் கூட்டிச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் V8 சொகுசு ஜீப் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய, வலான ஊழல் தடுப்பு பிரிவினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் வீட்டை கடந்த நவம்பர் மாதம் 02 ஆம் திகதி சோதனையிட்ட போதிலும், சந்தேகத்திற்குரிய கார் அங்கு காணப்படவில்லை.
எவ்வாறாயினும், காரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பொறுப்பில் எடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நவம்பர் 11ஆம் திகதி உத்தரவிட்டது.