இரு பேருந்துகள் மோதி கோர விபத்து : நால்வர் படுகாயம்!
#SriLanka
#Accident
Thamilini
1 year ago
வட்டவளை பகுதியில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று (25) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.