பாராளுமன்றத்தில் ஏற்பட்ட சர்ச்சை : டொக்டர் அர்ச்சுனாவை சந்திக்கும் சபாநாயகர்!
#SriLanka
#Parliament
Dhushanthini K
8 months ago

இந்த வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வாலா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து இனவாதம் குறித்து கருத்து வெளியிட்டமையினால் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இதன்படி, இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அர்ச்சுனாவின் முகநூல் கணக்குகள் சரிபார்க்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், மக்கள் ஒற்றுமையுடன் நாட்டை அபிவிருத்தி செய்வார்கள் என நம்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



