பதுளை - பிபில வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்!
#SriLanka
#Badulla
#Road
Thamilini
1 year ago
பதுளை - பிபில வீதியில் 143 மற்றும் 144 ஆவது கிலோமீற்றர் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (25.11) காலை 6.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை குறித்த வீதி போக்குவரத்துக்காக திறக்கப்படும் எனவும், மாலை 6.00 மணி முதல் நாளை (26) காலை 6.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நிலவும் காலநிலைக்கு ஏற்ப வீதியின் திறக்கும் நேரம் மாறலாம் எனவும், குறித்த இடத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவ கடமைகளுக்காக பசறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.