மன்னாரில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்!
#SriLanka
#Mannar
#weather
Thamilini
1 year ago
மன்னாரில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் தேவையான உதவி பொருட்களையும் வழங்கியுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் 2045 குடும்பங்களைச் சேர்ந்த 7778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அவர்கள் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதோடு,மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளதோடு,தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.