08 மில்லியன் ரூபாய் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது!
#SriLanka
#Arrest
#Anuradapura
Dhushanthini K
8 months ago

அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 மில்லியன் பெறுமதியான ஹம்பருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நொச்சியாகம பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்காலை பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரும், கொக்காவெவ, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



