ருஹுணு பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகளை மேற்பார்வை செய்ய வழங்கப்பட்டுள்ள நியமனம்!
#SriLanka
#students
#University
Thamilini
1 year ago
ருஹுணு பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக, சிரேஷ்ட பேராசிரியர் ஆர். எம். யு. எஸ். கே. ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் அக்ரமத்ய ஹரிணி அமரசூரிய இன்று (24) விசேட வர்த்தமானி மூலம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 20(4)(b) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக நாளை (25) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் பாரிய குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கு நிறுவன அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.