சீரற்ற வானிலை : அவசரநிலை ஏற்பட்டால் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்!
#SriLanka
#weather
#exam
#Flood
#School Student
#Emergancy
Thamilini
1 year ago
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அவசர நிலை ஏற்பட்டால் உயர்தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்களை அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
எந்தவொரு அவசரநிலையிலும் பரீட்சைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டால் 24 மணிநேர தொலைபேசி இலக்கமான 0412 234 134 க்கு அழைத்து தேவையான உதவிகளைப் பெற ஏற்பாடு செய்யுமாறு அவர் மேலும் கூறினார்.