இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்கு திட்டங்களை தொடர வேண்டும் - ரணில்!
#SriLanka
Dhushanthini K
8 months ago

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஆண்டு இந்தியாவுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட "நோக்கு ஆவணத்தை" தனக்குப் பின் வந்த அனுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கையெழுத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் பகுதிகளை குறிப்பிட்டுள்ள அவர், இந்த தொலைநோக்கு ஆவணத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் உதவியைப் பற்றி குறிப்பிட்ட அவர், தனது வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இந்த மரபு மூலம் தனது நாடு பயனடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.



