சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 497 இந்திய மீனவர்கள் கைது!
#India
#SriLanka
Dhushanthini K
8 months ago

இந்த வருடத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய, 66 மீன்பிடி படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இந்நாட்டு மீனவர்களின் கடற்றொழில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் கடற்படை அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.



