கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் மகனால் கத்தியால் குத்தி கொலை
#Jaffna
#Death
#Arrest
#Canada
#Murder
Prasu
10 months ago

கனடாவில் உள்ள பகுதியொன்றில் இலங்கைத் தமிழரான தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழினப் பற்றாளரும் கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி கடந்த 40 ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.
அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவரது மகன் இளங்கோ காதல் முறிவு காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் என்று அயல் வீட்டார் தெரிவித்தனர்.
சம்பவ தினத்தன்று இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடனடியாகக் கனடா பொலிஸார் அவரைக் கைது செய்து காவலியில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.



