வெயங்கொடவில் பூமிக்கடியில் இருக்கும் மர்மப்பொருள் : அகழ்வு பணிகள் முன்னெடுப்பு!
#SriLanka
Thamilini
1 year ago
வெயங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் புதையல் தேடும் பணி இன்று (23.11) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் புதையல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் புதையல் தேடும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் பிரகாரம் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பூமிக்கடியில் ஏதோ ஒரு மர்மப் பொருள் மறைந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து புதையல் தேடும் நடவடிக்கைகள் இன்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.