சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில் வெளியிடப்படவுள்ள அறிக்கை!
#SriLanka
#IMF
Dhushanthini K
8 months ago

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில், அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (23) காலை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வழங்க உள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பாக சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் திரு.அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இரு தரப்புக்கும் இடையிலான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளது.



