வெள்ளத்தில் மிதக்கும் யாழில் சில பகுதிகள்!
#SriLanka
Mayoorikka
8 months ago

வடக்கில் தற்பொழுது பெய்து வரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணத்தில் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த அனர்த்தத்தில் யாழ் புறநகர் பகுதிகளான நல்லூர், அரியாலை, போன்ற பகுதிகள் பாதிக்கபப்ட்டுள்ளதோடு மேலும் சில பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 145 குடும்பங்களை சேர்ந்த 494 பேர் பல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 14 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு கொண்டும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 103 குடும்பங்களை சேர்ந்த 424 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



