திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

#SriLanka #Examination
Mayoorikka
8 months ago
திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை ஒத்தி வைக்கப்படாது எனவும் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் 25 ஆம் திகதி பரீட்சை நடைபெறும் எனவும் கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம், உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அத்துடன் உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டால், ஏனைய பரீட்சைகளுக்கான திட்டமிடல் முற்றிலும் ஒழுங்கற்றதாக மாறிவிடும். 

 உயர்தர பரீட்சை நடைபெறும் திகதிகளுக்கு அமைய, அடுத்துவரும் சாதாரணதர பரீட்சை உள்ளிட்ட பல பரீட்கைகளுக்கான திகதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதகாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது..

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!