புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வலவை நியமிக்க தீர்மானம்!
#SriLanka
Thamilini
1 year ago
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் திரு.அசோக ரன்வலவை நியமிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஆரம்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ள நிலையில் முதலில் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகவும், இங்கு சுமார் 27 பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.